Menu

ஹமில்டன் பகுதியில் துப்பாக்கி சூடு..!!! இருவர் காயம்.!!

ஹமில்டன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில், காயமடைந்த இருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை, ஜோர்ச் ஸ்ரீட் மற்றும், ஹெஸ் ஸ்ரீட் பகுதியில், இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்கான இருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிசார், ஆண் மற்றும் பெண் என இருவரைக் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து துப்பாக்கியொன்றினையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon