Menu

நல்லாட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு உதவ தயார்..! ஜ.தே.கட்சி.!!!

அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டத்துக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கு தயாராக உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபூர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

நேற்று குருணாகல், மாவத்தகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கபூர் ஹாசீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நடத்தவுள்ள பாரிய போராட்டத்துக்கு தேவையான உதவிகளை செய்ய விருப்புவதாகவும் கபூர் ஹாசீம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்காக பேருந்துகளை கூட தன்னால் வழங்க முடியுமென்றும்; கபூர் ஹாசீம் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் புதியதொரு அரசாங்கத்தை உருவாக்கவே எதிர்வரும் 5 ஆம் திகதி பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே தான் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி வெளியில் வந்தாகவும் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன, மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கியே இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon