Menu

கழுத்தை நெரித்து தானே கொன்றதாக வாக்குமூலம்..!!!!!

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் தானே இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் கையடக்க தொலைபேசி அழைப்புகளை பரிசோதித்ததில், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், அவருக்கும் இடையில் உரையாடல்கள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த கறுப்பையா நித்தியகலாவுக்கும் தனக்கு தொடர்பு இருந்ததாகவும் ஒரு கட்டத்தில் தன்னை கூட்டிச் செல்லுமாறு நித்தியகலா வற்புறுத்தியதாகவும் கைது செய்யப்பட்ட நபர் ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

ஏற்கனவே தான் திருமணமாகதாக தெரிவித்த நபர் இதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ளவும் தீர்மானித்திருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று பெண் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும், அவரது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, அம்பாள் குள வீதியூடாக கிளிநொச்சிக்கு சென்று கரடிப்போக்கு வழியாக சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றதாகவும் கைது செய்யப்பட்டுள்ள நபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது நித்தியகலா நஞ்சு மருந்து போத்தல் ஒன்றை வாங்கிவந்ததாகவும் அங்கு சென்றதும் குடிப்பதாக தீர்மனித்திருந்ததுடன் பின்னர் தமக்குள் பிரச்சனை ஏற்ப்ட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கறுப்பையா நித்தியகலா நிறுவன உடையில் வந்ததுடன் அவளது கழுத்தில் இருந்த தொழில் அடையாள அட்டையின் பட்டியைக் கொண்டே கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் கைது செய்யப்பட்டுள்ள நபர் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் நள்ளிரவு வீட்டிற்கு சென்றதும் மோட்டார் சைக்கிளை மறைத்துவைத்துவிட்டு, தானும் தற்கொலை செய்யவே முயற்சித்ததாகவும்

எனினும், தனது பிள்ளைகளை நினைத்து அதனை செய்யவில்லை என்றும் சந்தேகநபர் வாக்குமூலத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடமைகள் வீசப்பட்ட இடமான கனகபுரம் பகுதியில் இருந்து குறித்த பெண்ணின் உடைமைகள் மற்றும் சந்தேகநபரின் வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon