Menu

மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்தமுடியாது

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்துவற்கு அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, சென்னை மெரினா கடற்கரையில் காவிரி பிரச்சனைக்காக ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியிருந்தார்.

 

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்த நிலையில், அதனை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, தொடர்ந்து வழக்கை விசாரித்தனர்.

 

இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது எனவும், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியானது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon