Menu

இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பாரிய ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைந்த எதிரணி சூளுரை.!!!

கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டமானது இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பாரிய ஆர்ப்பாட்டமாக இருக்கும் என ஒருங்கிணைந்த எதிரணியின் தலைவரான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில், இன்று (04.09.2018) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே தினேஸ் குணவர்தன இவ்வாறு தெரிவித்திருந்தார்.

 

ஒருங்கிணைந்த எதிரணியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் கைக்கோர்த்து, நாட்டிற்கு தேவையற்ற, மற்றும் நாட்டையே அழிக்கின்ற அரசாங்கத்துக்கு எதிராக, ஜனநாயக ரீதியாக பாரிய போராட்டமொன்றை நாளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் இதற்கான அனைத்து முன் ஏற்பாடுகளையும் தாம் நிறைவுசெய்துள்ளதாக தெரிவித்த தினேஸ் குணவர்தன

 

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் இளைஞர் அணியினர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் சிறப்பாக இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அரசாங்கத்துக்கு எதிராக தாம் மேற்கொள்ளவுள்ள இந்த எதிர்ப்புப் போராட்டமானது இலங்கை வரலாற்றிலேயே பெரிய போராட்டமாகவும் அமையும் என்றும் நாடு முழுவதும் இதற்காக மக்கள் கொழும்பில் ஒன்றிணையவுள்ளதாகவும் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

 

வடக்கு மற்றும் தெற்கு என எல்லா இடங்களில் இருந்தும் மக்கள் நாளையதினம் கொழும்பில் முகாமிடவுள்ளதாகவும் தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் சிவில் சமூக அமைப்பினர், மகாநாயகக்கத் தேரர்கள், மற்றும் மதகுருமார்கள் என பலரும் இதற்காக ஒன்றிணையவுள்ளதாகவும் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், இதனை முடக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளையும் செய்துவருவதாகவும்
எனினும் எவ்வாறான எதிர்ப்புக்கள் வந்தாலும் தமது பயணத்தை இடை நிறுத்தப்போவதில்லை’ என்றும் தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon