Menu

இராணுவத்தை வரவேற்பதற்காக பரத நாட்டியதை தெருவில் ஆடமுடியாது..!!!!

வடக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் பரத நாட்டியத்தை தெருவிலே ஆட முடியாது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே அதற்கான சுற்று நிருபத்தினை வடக்கு மாகாண கல்வி அமைச்சு விரைவில் வெளியிட உள்ளதாகவும் க.சர்வேஸ்வரன் மேலும் தெரிவித்தள்ளார்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இந்திய துணைத்தூதரகமும் இணைந்து நடாத்தும் ‘தெய்வீக சுகானுபவம்’-7 இன்று (04.09.2018) யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே க.சர்வேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

பரத நாட்டியத்தினை யாரையும் வரவேற்பதற்காக தெருவிலே ஆடக்கூடாது என்றும் க.சர்வேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

பரத நாட்டியத்தினை தெருவிலே ஆடுகின்ற நிலைமை இருக்கக்கூடாது என்றும் வடக்கு மாகாணத்திற்குற்பட்ட எல்லா பாடசாலைகளுக்கும், மற்றும் நிறுவனங்களுக்கும் சுற்றுநிருபம் அனுப்ப இருபதாகவும் க.சர்வேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விழாக்கள் இடம்பெறும் போது அதிதிகளை அழைத்து வருவதற்கு தெருவிலே பரத நாட்டியம் ஆடப்பட்டதை பல இடங்களிலே அவதானித்திருததாகவும் க.சர்வேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விழாக்களிலே இராணுவத்தை வரவேற்பதற்கு கூட பரதநாட்டியம் தெருவிலே ஆடப்பட்டிருந்தாகவும் க.சர்வேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

சிங்களவர்களின் கண்டிய நடனத்தை வேண்டுமென்றால் அவர்கள் தெருவிலே ஆடட்டும் என்று தெரிவித்த க.சர்வேஸ்வரன்
ஆனால் பரதநாட்டியம் என்பது மேடையிலே மக்களுக்கு செய்தியை சொல்லக்குடிய வகையிலே ஆடப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

குறிப்பாக சில முன்பள்ளிகள் கூட இவ்வாறான செயற்பாட்டினை மேற்கொண்டிருந்ததாகவும் க.சர்வேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே போன்று இந்த பரதநாட்டிய கலையை மேலும் வளர்த்தெடுப்பதற்கு வட இலங்கை சங்கீத சபை ஊடாக மிகச்சிறந்த ஒரு நூலகத்தை உருவாக்குவது தொடர்பிலும் செயற்பட்டுக்கொண்டிருப்பதாகவும் க.சர்வேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

கலைகளை வளர்ப்பது தொடர்பில் வடக்கு மாகாண கல்வியமைச்சு பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த க.சர்வேஸ்வரன்
அந்த வகையில் வருடாவருடம் இந்த தெய்வீக சுகானுபவம் என்பதும் ஒரு முக்கியமான விடயம் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் தமிழக கலைஞர்களுக்கும், ஈழ கலைஞர்களுக்கும் இடையிலான ஒரு நல்ல பரிமாற்றத்தினையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் களமாக அமையும்’ என்றும் க.சர்வேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

இலங்கையில் தற்போது உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை அமுல்படுத்தவேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்துகின்றது   ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் பிரசல்ஸில் இடம்பெற்ற 22வது கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது   2018 இன் பிற்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட அரசியல் நெருக்கடிநிலையின் போது ஜனநாயக கட்டமைப்புகள் வெளிப்படுத்திய உறுதிப்பாட்டை கருத்தில்கொண்டு இலங்கையில் நல்லாட்சி மனித உரிமைகள் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான தனது முழுமையான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது   இந்த சந்தப்பில் மனித உரிமைகளும் நல்லிணக்கமுமே முக்கியமான நிகழ்ச்சி நிரலாக காணப்பட்ட இந்த இரு விடயங்கள் குறித்து தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவது என இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன எனவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது   புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான சட்டமூலம் குறித்து ஆராயப்பட்டு வருவதை ஏற்றுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச தராதரத்திலான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக தற்போதைய சட்டத்தை நீக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது எனவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அனைத்து சூழ்நிலையிலும் மரணதண்டனையை பயன்படுத்துவதற்கும் ஐரோப்பிய ஓன்றியம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Right Menu Icon