Menu

நாளைய போராட்டத்தை இடையூறு இல்லாமல் நடத்துங்கள் பிரதமர் அறிவுரை.!!!

மக்களுக்கு எந்தவொரு இடையூறும் இல்லாமல் போராட்டத்தை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

தாம் நாளையதினம் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு எந்தவொரு தடையும் செய்யபோவதில்லை என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

எனினும் பாராளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையூறாக செயற்பட்டால் பொலிஸார் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அத்துடன் கூட்டு எதிரணியின் போராட்டத்தை தடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுக்கவில்லை என தெரிவித்த பிரதமர்
நல்லாட்சியில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டமையின் காரணமாகவே கூட்டு எதிரணியினர் போராட்டத்தை நடந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon