Menu

ஊடக சுதந்திரத்தின் அடக்கு முறைக்கு எதிராக குரல் எழுப்பும் கனடா..!!!!

ரோஹிங்கிய மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையானது, மியன்மாரின் சட்ட ஆட்சி மற்றும் ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் ஊடகவியலாளர்களின் விடுதலையை வலியுறுத்தும் சர்வதேச நாடுகளுடன் தாமும் இணைந்து குரல் கொடுக்கவுள்ளதாக கிறிஸ்டியா ஃப்ரீலண்ட வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரோஹிங்கிய மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக செய்தி சேகரித்த ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் இருவருக்கும் மியன்மார் நீதிமன்றத்தால் நேற்று 03.09.2018 ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் அதிகாரி வழங்கிய உத்தியோகபூர்வ ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் வா லோன் மற்றும் கியாவ் சோ லூ என்ற இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் அவர்களுக்கு இருந்ததாகவும், தேசிய இரகசிய சட்டத்தை மீறியது நிரூபிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டே குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இது பொலிஸாரால் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும் தாம் நிரபராதிகள் என்றும் குற்றம் சாட்ட ஊடகவியலாளர்கள் இருவரும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon