Menu

வடக்கு அபிவிருத்தி தொடர்பில் பிரதமருக்கே அதிகாரம் உள்ளது என்கிறார்.!!

வடக்கின் வீடமைப்புத்திட்டத்தை முன்னெடுக்கும் நகர்வுகள் இப்போது தனது கையில் இல்லை என மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

 

வடக்குக்கான வீடுகளை அமைக்கும் திட்டம் பிரதமர் கையிலேயே உள்ளதாகவும் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

 

தன்னால் ஆலோசனைகளை வழங்க மட்டுமே முடியும் என்றும் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

 

அத்துடன் 2020 ஆம் ஆண்டளவில் வடக்கில் உள்ள கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படும் எனவும் டி.எம்.சுவாமிநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று 04.09.2018 வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வடக்கின் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கை மற்றும் வடக்கின் வீட்டுத்திட்டம் எந்த கட்டத்தில் உள்ளதென கேள்வி எழுப்பினார்

 

அத்துடன் மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த வீட்டுத்திட்டங்களை அமைக்க முடியுமா என்றும் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon