Menu

பிரான்ஸில் மாணவர்கள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தடை

பிரான்ஸ் நாட்டில் ஆரம்ப மற்றும் நடுநிலை பாடசாலைகளில், இடைவேளை நேரம் உள்பட நாள் முழுவதும் மாணவ- மாணவிகள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

பிரான்ஸ் நாட்டில்; கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தின் பிரகாரம், ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில், இடைவேளை நேரம் உள்பட நாள் முழுவதும் மாணவ- மாணவிகள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

எனினும் பேரிடர் காலங்களிலும் மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கும் இந்த தடை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாடசாலைக்குச் செல்லும் போது மாணவர்கள் தமது கையடக்க தொலைபேசியை நிறுத்திவிட்டு பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த சட்டத்தை உயர் நிலைப்பாடசாலைகளும், தாமாக முன்வந்து செயல்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், தடையை மீறி பாடசலையில் கையக்கத் தொலைபேசியை பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Right Menu Icon