Menu

மலேசியாவில் காரில், ஓரினச்சேர்க்கையில் ,ஈடுபட்ட பெண்களுக்கு பிரம்படி

மலேசியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 2 பெண்களுக்கு முதன்முறையாக பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 

மலேசியாவில் இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்கப்படும் நிலையில், டிரெங்கானு மாநிலத்தில் காருக்குள் 22 மற்றும் 32 வயதுடைய பெண்கள், இருவர், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

இவர்களை பொலிசார், கைது செய்து வழக்கு தொடர்ந்திரந்தனர்.

 

வழக்கினை விசாரித்த நீதிபதி இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினார்.

 

மேலும் பெண்கள் இருவருக்கும், தலா 6 தடவை பிரம்படி தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

இந்த தீர்பின் பிரகாரம், குறித்த இரு பெண்களுக்கும் பிரம்படி தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

ஓரின சேர்க்கை குற்றத்துக்காக மலேசியாவில் பெண்களுக்கு பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்த தண்டணைக்கு கண்டனம் வெளியிட்டுள்ள மனிதஉரிமை ஆர்வலர்கள், இது ஒரு கொடுமையான செயல் என்றும் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon