Menu

இம்ரான்கானின் சுயரூபம் இனி மெல்ல மெல்ல வெளிவரும் – முதல்மனைவி பேட்டி

பாகிஸ்தான் பிரதமர், இம்ரான்கானின் சுயரூபம் இனி மெல்ல மெல்ல வெளிவரும் என அவரின், முதல் மனைவி பேட்டியளித்துள்ளார்.

 

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

 

பாகிஸ்தானில் நிலவும் ஊழல் குறித்து ரேஹம் கான் புத்தகம் ஒன்றினை வெளியிட்டிருந்தார்

 

குறித்த புத்தகம் இம்ரான்கானை தாக்கி எழுதப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

 

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி, குறித்த புத்தகத்தில், இருக்கும் விடயங்களை மக்கள் அறிந்து கொள்வதற்கான சரியான தருணம் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இம்ரான் கானிடம் எப்போதும் ஒழுக்கத்தை எதிர்ப்பார்க்க முடியாது என்றும், தற்போது அதிக செல்வாக்குடன் இம்ரான்கான் இருப்பதால், இனி அவரது சுயரூபம் வெளிப்படும் என இம்ரான்கானின் முதல் மனைவி குறிப்பிட்டள்ளார்.

 

மேலும், மார்டீன் லூதர் கிங் போல, காந்தி போல, நெல்சன் மண்டேலா போல புதிய தலைமுறை தலைவர்களை தன்னால் உருவாக்க முடியும் எனவும் ரேஹம் கான் தெரிவித்துள்ளார்.

 

இவ்வாறான தலைவர்களைப் போலவே இம்ரான்கானும் இருப்பார் என்று நம்பி வாக்களித்த போதிலும் அவரும், அரசியல் தலைவர்களின் வழியையே பின்பற்றுவதாக ரேஹம் கான் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon