Menu

வீடு ஒன்றின் காணியிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு!!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழங்குளம் பகுதியிலுள்ள வீட்டுக்காணியிலிருந்து வெடி பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளரால் துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே மிதிவெடிகள், மோட்டார் குண்டு, மற்றும் ஆர்.பி.ஜி ரக குண்டுகள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து ஓமந்தை பொலிஸாருக்கு காணியின் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், நீதிமன்ற அனுமதியுடன் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் மேலும் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Right Menu Icon