Menu

இறுதி யுத்தம் இடம்பெற்ற இடத்திலேயே நினைவு தூபி அமையபெறவேண்டும்..ஈ.பி.டி.பி வலியுறுத்து.!!!

நாட்டில் எங்கே இறுதி யுத்தம் நடைபெற்றதோ அங்கேயே நினைவுத் தூபி அமைய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, மற்றும் காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கு ஊதியமொன்றை செலுத்துதல் போன்றவற்றிற்கான விவாதம் இன்றையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

 

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

நினைவுத்தூபி தொடர்பில் தான் ஏற்கனவே தனிநபர் பிரேரணை ஒன்றினை சபைக்கு கொண்டு வந்திருந்தாக தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா

 

கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த அனைவரையும் நினைவு கூறுவதற்காகவும், மற்றும் மத அனுஸ்டானங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாகவும் நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

 

அதனை நல்லாட்சி அரசு ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

அத்துடன் அந்த நினைவுத்தூபி அமையவுள்ள இடம் தொடர்பில் தமக்கு இணக்கம் இல்லை என்றும்
மேற்படி நினைவுத்தூபியானது இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதியிலேயே அமைய வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் ; டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்விடயம் தொடர்பில் இதுவரையில் எவ்விதமானதொரு ஏற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை என்றும்  டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நினைவு தூபி அமைப்பதில் நல்லாட்சி அரசு உடனடி அவதானத்தை செலுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon