Menu

மக்கள் வெள்ளத்தை பார்த்து அரசாங்கம் பதற்றமடைந்துள்ளது என்கிறார்..!!!!

கொழும்பில் இடம்பெறுகின்ற எதிர்ப்பு பேரணி காரணமாக அரசாங்கம் பதற்றமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ரஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

கூட்டு எதிர்க்கட்சியினரின் ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு  பேரணி காரணமாக அரசாங்கம் மிகவும் பதற்றமடைந்து நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உள்ள பொலிஸாரை கொழும்புக்கு அழைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ரஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

 

தற்போது இடம்பெற்றக் கொண்டிருக்கின்ற எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ரஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

பல சவால்களுக்கு மத்தியிலும் பாரிய மக்கள் வெள்ளம் இன்று கொழும்புக்கு வந்துள்ளதாக நாமல் ரஜபக்ஷ குறிப்பிட்டார்.

 

அரசாங்கத்தின் ஏமாற்று வித்தைகளுக்கு மக்கள் மேலும் ஏமாற மாட்டார்கள் என்றும் மக்கள் வெள்ளம் கொழும்புக்கு வருவதன் நோக்கத்தை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ரஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon