Menu

நல்லாட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு வந்த மக்களின் பேருந்து மீது தாக்குதல்!!!

மஹிந்த தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மக்களை ஏற்றி வந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பதுளை பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இலக்கத் தகடுகள் அற்ற கனரக வாகனம் ஒன்றில் வந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

குறித்த பேருந்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்கள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இதேவேளை, கொழும்பு – கடவத்தை பிரதேசத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிரணி இன்று கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு எழுவர் நியமனம்

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு ஏழு...

Leave a Reply

Right Menu Icon