Menu

மக்கள் இன்று அனுபவிக்கும் சுதந்திரம் தன்னால் தோற்கடிக்கபட்ட பயங்கரவாதத்தினாலே உருவாகியது என்கிறார்..!!!

நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

 

´மக்கள் பலம் கொழும்புக்கு´ என்ற தொனிப்பொருளிலான ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இப்போது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பல்வேறு கஷ்டங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் நாட்டில் ஜனாநாயகம் முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு கூட அரசாங்கத்தால் முடியாதுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் மக்களுடன் ஒன்றிணைந்து இன்று வீதியில் இறங்கி இருப்பது ஆட்சியை கவிழ்க்கவே என்றும் அதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

 

கடந்த காலத்தில் தான் பயங்கரவாதத்தை இல்லாது ஒழித்தால் அதனை எல்லோரும் தற்போது அனுபவிப்பதாக தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ

அதனை எண்ணி இன்று சத்தியகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் பிரதிபலிப்பாக தற்போதைய ஆட்சியை கவிழ்க்க முடியும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon