Menu

ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கை!!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகத்தின் இடைக்கால அறிக்கை இன்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் பணியகத்தின் தலைவருமான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையானது கடந்த மாதம் 30ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் ஜனாதிபதி நாட்டில் இல்லாத காரணத்தினால், இதுவரையில் கையளிக்கப்படவில்லை என்றும் சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணிமனை செயற்பட ஆரம்பித்த பின்னரான குறுகிய காலத்தில் மேற்கொண்ட சந்திப்புகள் மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு வழங்கப்படக்கூடிய இடைக்கால நீதி நிவாரணம் உள்ளிட்ட விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon