Menu

நீதிமன்றங்கள் மற்றும் விசேட பொலிஸ் அலுவலகங்களை தாக்க திட்டம் !!

கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பொது எதிரணியின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது விசேட நீதிமன்றத்திற்கும், நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவிற்கும் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

 

விசேட நீதிமன்றத்திற்குள்ளும், விசேட பொலிஸ் பிரிவின் அலுவலகத்திற்குள்ளும் புகுந்து அங்குள்ள ஆவணங்களை அழிப்பதற்கு காடையர் கும்பலொன்று திட்டமிட்டுள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் மிக முக்கியமான இடங்களிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

 

நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவின் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் விசேட நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon