Menu

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவேந்தல்!!

கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமால் ஆக்கப்பட்டவர்களின் 28 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

 

கிழக்குப் பல்கலைக் கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த 1990 ஆண்டு நடுப்பகுதியில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் ஊக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் உயிர் அச்சம் காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்த முகாமில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.

 

இதன் பொது அங்கு 1990ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 5ஆந் திகதி நடைபெற்ற சுற்றிவளைப்பின் போது 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon