Menu

புல்லட் ரயிலில் பறக்கவுள்ள இந்தியர்கள்

ஜப்பானிடம் இருந்து 7 ஆயிரம் கோடிக்கு 18 புல்லட் ரயில்களை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மும்பைக்கும்- அகமதாபாத்துக்கும் இடையே அதிவேக புல்லட் ரயில் 2022-ம் ஆண்டு இறுதியில் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

மணிக்கு 508 கிலோமீற்றர், வேகத்தில் இயங்கும் ரயிலுக்கான கட்டுமான பணிகள் ஜப்பான் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

இதற்காக ஜப்பானிடம் இருந்து 18 ரயில்களை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ஒவ்வொரு ரயிலிலும் தலா 10 பெட்டிகள் இருக்கும் என்பதுடன், அவற்றை மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதற்கான விலைமனுக்கோரல், விரைவில் அறிவிக்கப்படவுள்ளதுடன், அதில் ஜப்பான் நிறுவனங்கள் பங்கேற்கிறது.

 

ஜப்பானில் இயங்கும் புல்லட் ரயில்கள் மிகவும் பாதுகாப்பானது என்ற அடிப்படையிலேயே 7 ஆயிரம் கோடிக்கு , ஜப்பானிடம் இருந்து புல்லட் ரயில் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

புல்லட் ரயில் மூலம் மும்பை- அகமதாபாத்துக்கு தினமும் 18 ஆயிரம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுடன், இதற்கான கட்டணம் 3 ஆயிரத்துக்கும் கீழ் நிர்ணயிக்கப்படும் என தெரியவருகின்றது.

 

மேலும் புல்லட் ரயிலில் பயணம் செய்யும் போது, விமானத்தில் பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon