Menu

உடற்பயிற்சியில் ஈடுபடாத 140 கோடி பேர், ஆபத்தின் விளிம்பில் உள்ளதாக எச்சரிக்கை

சர்வதேச அளவில், உற்பயிற்சியில் ஈடுபடாமல் உள்ள 140 கோடி ஆண்களுக்கும், பெண்களுக்கும் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

 

உடற்பயிற்சி செய்வது உடல் நலனுக்கு சிறந்தவொன்றாக இருப்பதுடன், இதன் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும்.

 

எனினும், உடற்பயிற்சி, செய்யாவிட்டால் இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் புற்று நோய் பாதிக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

‘தி லான்சைட் குளோபல் ஹெல்த்’ என்ற அறிவியல் நாளிதழில் உலக சுகாதார நிறுவனம் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

 

அதில் வாரத்துக்கு குறைந்தது 150 நிமிடங்கள் நடை பயிற்சி, நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற சாதாரண உடற்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இல்லாவிடில் சுமார் 75 நிமிட நேரம் கடினமான உடற்பயிற்சியான ஓடுதல், குழு விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமையினால், சர்வதேச அளவில் 140 கோடி ஆண்களும், பெண்களும் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

 

கடந்த 2001-ம் ஆண்டு முதல் 168 நாடுகளில், 19 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon