Menu

யாழ்ப்பாணத்தை விடாது விரட்டும் கஞ்சா

யாழ்.புன்னாலைக்கட்டுவான் பகுதியில் கஞ்சா போதை பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றசாட்டில் ஐந்து இளைஞர்களை சுன்னாக பொலிசார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களின் உடமையில் இருந்து ஒரு கிலோ 250 கிராம் நிறையுடைய கஞ்சா போதை பொருளை கைப்பற்றியதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

 

பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

அத்துடன், இவர்கள் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்யும் நோக்கத்துடன், உடமையில் வைத்திருந்தார்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon