Menu

யாழ் தீவக மக்களுக்கான குடிநீருக்காக 2000 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு

யாழ் தீவக மக்களுக்காக குடிநீரை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

இதற்காக 2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

 

வடமராட்சி களப்பு நீர் வளத்தை பயன்படுத்தி யாழ் தீவகத்தில் வாழும் மக்களுக்காக சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக உத்தேச திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதற்கு அமைவாக 2000 மில்லியன் ரூபா முதலீட்டுடன் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

 

இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைசசர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீர்ப்பாசன மற்றும் நீர் வள மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon