Menu

இன ரீதியான பாடசாலைகளை ஒழிப்பதன் மூலம் இன முரண்பாடுகள் கட்டுப்படுத்த முடியாது என்கிறார்..!!!

நாட்டில் இன ரீதியான பாடசாலைகளை ஒழித்தால் இன முரண்பாடுகள் ஒழிந்து போகும் என்பதனை உறுதிப்படுத்த முடியாது என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

பாடசாலை ஒன்றில் இன ரீதியான தனித்துவ அடையாளம் காணப்பட்டாலும் அதில் ஏனைய இன மாணவர்களும் கற்கக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம் அதுவே காலத்தின் தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையில், இன முரண்பாடுகளை இல்லாதொழிக்கும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய, நாளை தினம் தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon