Menu

இணையத்தள கிண்டலில் ஈடுபட்டால் சிறைத்தண்டனை மற்றும், அபராதம்- சவுதி அதிரடி அறிவிப்பு

பொது வாழ்க்கைமுறை, மதம்சார்ந்த கோட்பாடுகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் நையாண்டி விமர்சனங்களை தண்டனைக்குரிய குற்றமாக சவுதி அரசு அறிவித்துள்ளது.

 

சவுதி அரேபியாவின் புதிய மன்னராக முஹம்மது பின் சல்மான் பொறுப்பேற்ற பின்னர் முகப்புத்தகம், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் அரசின் செயல்பாட்டை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

 

இதற்கு மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், பொது வாழ்க்கைமுறை, மதம்சார்ந்த கோட்பாடுகள் பற்றி இணையதளங்கள் மூலம், கேலி, கிண்டல் மற்றும் விமர்சனங்கள் என நையாண்டித்தனமான தகவல்களை பரப்பும் செயலை தண்டனைக்குரிய குற்றமாக்க சவுதி அரசு தீர்மானித்துள்ளது.

 

அவ்வாறு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 30 லட்சம் ரியால்கள் அபராதமாக விதிக்கப்படும் சவுதியின், தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon