Menu

ஒன்ராறியோ மாகாணத்தில் பீட்டர் பரோ நகரில் குற்ற செயல்கள் அதிகரிப்பு.!!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் பீட்டர் பரோ நகரில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஒன்ராறியோ மாகாணத்தின் பீட்டர்பரோ நகரில் இடம்பெற்று வருகின்ற குற்றச்செயல்களின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாகவும் குற்ற புலனாய்வு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜுன் மாத இறுதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச்செயல்கள், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.7 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.

அதாவது கடந்த ஆண்டை விட 2018ம் ஆண்டில் 63 இற்கும் அதிகமான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாகவும் குற்ற புலனாய்வு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் கொலைக் குற்றங்கள் பதிவாகவில்லை என தெரிவித்துள்ள குற்ற புலனாய்வு பிரிவினர்  கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்  இது அடுத்த காலாண்டுக்கான கணப்பெடுப்பில் உள்ளடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon