Menu

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இணைவதற்கு கனடா முயற்சி.!!!

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில், மீண்டும் கனடா இணைந்து கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃபிரீலான்ட் தெரிவித்துள்ளார்.

 

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினை மீள கட்டியெழுப்பும் திட்டத்தில் கனடாவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கிறிஸ்டியா ஃபிரலான்ட் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இவ்விடையம் தொடர்பாக இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கிறிஸ்டியா ஃபிரீலான்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவுடன் கடந்த நான்கு நாட்கள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவித்த கிறிஸ்டியா ஃபிரலான்ட் ஆனால் குறித்த பேச்சுவார்தைக எவ்வித பலனுமின்ற முடிவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் 1.2 த்ரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இருதரப்பு வர்த்தகத்தினை மெக்சிகோவுடன் மேற்கொள்ளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை மூலம் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கனடாவின் அங்கத்துவத்தை நீடிக்கும் முயற்சியில் கிறிஸ்டியா ஃபிரலான்ட் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon