Menu

ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் காணொளிகள் வெளியாகியுள்ளது.!!!

ஒன்ராறியோவின் வாகன் மில்ஸ் பகுதியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் காணொளிகளை குற்ற புலனாய்வு பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

 

கடந்த வாரம் வான் மில்ஸ் மால் பகுதியில் வாகன தரிப்பிடம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் சந்தேசிக்கப்படும் மூன்று ஆண்களின் கண்காணிப்பு காணொளி காட்சிகளை குற்ற புலனாய்வு பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

 

கடந்த ஓகஸ்ட் மாதம் 28ம் திகதி, நெடுஞ்சாலை 400 இற்கு அருகில் இந்த துப்பாக்கி சுட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

சம்பவம் இடம்பெற்ற போது குறித்த இடத்திற்கு சென்ற பொலிசார் மூன்று சந்தேக நபர்கள் வாகனம் ஒன்றில் தப்பி சென்றிருந்தாகவும் தெரிவித்திருந்தனர்.

 

அத்துடன் சமபவத்தில் காயமடைந்த நபர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

காயமடைந்த நபர் ரொறான்ரோவை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

 

இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகளை பொலிசார் நேற்றையதினம் வெளியிட்டுள்ளனர்.

 

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தோர் 1-866-876-5423 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon