Menu

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு..!!!

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெய்து வரும் கன மழையில் சிக்கி முதற்கட்டமாக 44 பேர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை முதலமைச்சரான யோகி ஆதித்யநாத் உலங்கு வானூர்தியில் சென்று இன்று பார்வையிட்டுள்ளார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேக...

Leave a Reply

Right Menu Icon