Menu

கிருஷாந்தி குமாரசாமியின் 22ஆவது ஆண்டு நினைவு தினம்.!!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 22ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

 

செம்மணி படுகொலை நினைவேந்தல் பேரவையின் தலைவரான ஞா.கிஸோர் ஏற்பாட்டில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

 

இரண்டு நிமிட மௌன அஞ்சலியின் பின்னர் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், கே.சயந்தன்,

 

ஆர்.ஜெய்சேகரம் உட்பட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கிரிசாந்தியின் உடலை புதைத்த இடத்தினை கண்டுபிடிக்க உதவிய ஆசிரியர் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 

இறுதியாக கிரிசாந்தியின் நினைவாக 40 பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

 

கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் 7ஆம் திகதி க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த கிருஷாந்தி, ராணுவத்தால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே

 

அத்துடன் கிருஷாந்தியை தேடிச் சென்ற பெற்றோரும் மற்றும் அயலவர்களும் இதன் போது கொன்று புதைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon