Menu

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு கைதிகளின் விடுதலை உறுதி..!!

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின், கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக, நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்ததும் ஆளுனரிடம் பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம், தமிழக ஆளுநருக்கு உள்ளதாக உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இவ்விடையம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எனவே 7 பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாகும் என்றும் ஜெயக்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.

 

எனவே அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அதில் உள்ள உத்தரவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆராய்ந்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி தேவையான முடிவுகளை எடுக்க உள்ளதாகவும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் தேவை ஏற்படின் அமைச்சரவையை கூட்டி விவாதித்ததன் பின்னர் ஆளுனருக்கான பரிந்துரைகள் இடம்பெறும் என்றும் ஜெயக்குமார் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon