Menu

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை கடும் கண்டனம்.! மலேசிய பிரதமர்!!!

மலேசியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பில் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

மலேசியாவில் இஸ்லாமிய சட்டம் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் மலேசியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கான தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

 

குறித்த இரண்டு பெண்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதுடன் இருவருக்கும் தலா 6 பிரம்படி வழங்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் 100 பேர் முன்னிலையில் இரண்டு பெண்களுக்கும் பிரம்படி தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் இரண்டு பெண்களுக்கும் பிரம்படி தண்டனை வழங்கியதற்காக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கண்டனம் வெளியிட்டுள்ளார்.

 

வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிவித்த மலேசிய பிரதமர் குறித்த தண்டனையானது இஸ்லாமிய மதம் கூறுகிற நீதியையும், மற்றும் சகிப்புத்தன்மையையும் பிரதிபலிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அத்துடன் இஸ்லாம் என்பது மக்களை இழிவுபடுத்துகிற மதம் அல்ல என்பதை உணர்தவேண்டியது முக்கியமானது என்றும் மலேசிய பிரதமர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon