Menu

மன்னார் வைத்தியசாலையில் 2வது நாளாக இன்றும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு..!!!

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் 2வது நாளாகவும் இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையாற்றுகின்ற வைத்தியர் மீது இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்றையதினம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பினை, 2ஆவது நாளாக இன்றும் தொடர்ந்துள்ளனர்.

 

மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில், கர்ப்பிணி தாய் ஒருவர் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டு, அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார்.
இருப்பினும் குழந்தை இறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்ட தாயை பார்வையிட வந்த கணவர் மற்றும் உறவினர்கள் சம்பவத்தை அறிந்தவுடன், பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரியையும் பாதுகாப்பு உத்தியோகஸ்தரையும் தாக்கியுள்ளனர்.

 

அத்துடன் சம்பவத்தை அறிந்த பொலிஸார், அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவித்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்று காலை 8 மணிமுதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

 

அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான வைத்திய அதிகாரி மற்றும் மகப்போற்று வைத்திய நிபுணர் ஆகியோர், குறித்த வைத்தியசாலையில் தொடர்ந்தும் கடமையாற்றுவதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லையென எழுத்து மூலமாக தெரிவித்து மன்னார் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon