Menu

இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இன்னும் விடுவிக்கப்படதா நிலையில் ஆறு பாடசாலைகள்.!!!!

வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள், இன்னமும் ஆறு பாடசாலைகள் விடுவிக்கப்படாமல் உள்ளதாக வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 2ஆயிரத்து 800 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தை விடுவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகிர்தன் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

 

அண்மையில் மயிலிட்டிக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மயிலிட்டி கலைமகள் பாடசாலையை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் சுகிர்தன் குறிப்பிட்டுள்ளார்.

 

அதனடிப்படையில் குறித்த பாடசாலை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்மும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கின்ற ஆறு பாடசாலைகள் விடுவிக்கப்படாமல் உள்ளதாகவும் சுகிர்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதேபோன்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகமும், சிறுவர் பூங்கா, மற்றும் விளையாட்டு மைதானங்கள் உட்பட பல இடங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் சுகிர்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

எனவே குறித்த காணிகளும் பாடசாலைகளும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என தெரிவித்த சுகிர்தன் அதனூடாக வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்றம் துரிதமாக இடம்பெறவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon