Menu

அமெரிக்காவின் புதிய தூதுவராக அலைனா பி டெப்லிஸ்ஸின் நியமனத்திற்கு அமெரிக்க சென்ட் சபை அங்கீகாரம்.!!!

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலைனா பி டெப்லிஸ்ஸின் நியமனத்திற்கு அமெரிக்க சென்ட் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்க தூதுவராக செயற்பட்ட அதுல் கேசாப் தமது பதவிக் காலம் நிறைவடைந்து, அமெரிக்கா திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

குரல் மூல வாக்கெடுப்பின் மூலமே டிரம்பின் இந்த நியமனத்திற்கு அமெரிக்க செனெட் சபை நேற்றையதினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

அத்துடன் இலங்கைக்கான புதிய தூதுவராக அலைனா பி டெப்பிலிட்ஸின் நியமனத்திற்கு அமெரிக்க செனட் அங்கீகாரம் வழங்கியுள்ளதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ள இலங்கைகான

 

அமெரிக்க தூதரகம், புதிய தூதுவரை வரவேற்பதற்கு காத்திருப்பதாகவும் டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

அமெரிக்க வெளிவிவகார சேவையின் சிரேஸ்ட இராஜதந்திரியான டெப்பிலிட்ஸ், இறுதியாக நேபாளத்திற்கான தூதுவராக பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon