Menu

வடக்கின் அபிவிருத்திகளுக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.!!!

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் நலிவடைந்து போயுள்ள வடக்கின் அபிவிருத்திகளுக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் ப்ரைஸ் ஹட்ச்சன் தெரிவித்துள்ளார்.

 

இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட அவுஸ்ரேலிய தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 

இந்த சந்திப்பானது யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

யுத்தத்திற்கு பின்னர் வடக்கு மாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும், அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும் அவுஸ்ரேலிய தூதுவர், ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

 

வடக்கு மாகாணத்தில் மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான பணிகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசு விருப்பம் கொணடுள்ளதாகவும் ப்ரைஸ் ஹட்ச்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

விசேடமாக தமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி, மழைநீர் மூலமான விவசாய நடவடிக்கையினை வடக்கு மாகாணத்தில் ஏற்படுத்துவதற்கு எண்ணியுள்ளதாகவும் ப்ரைஸ் ஹட்ச்சன் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவுஸ்ரேலிய தூதுவர் தெரிவித்தார்.

 

அபிவிருத்திக்கு தேவையான நிதியினை இலங்கை அரசாங்கத்திற்கு, அவுஸ்ரேலிய அரசு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதில் வடக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப்பணிகளை செய்வதற்கும் அவுஸ்ரேலிய அரசாங்கம் எண்ணியுள்ளதாகவும் ப்ரைஸ் ஹட்ச்சன் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon