Menu

மக்களுக்கான சிறந்த உடன்படிக்கையை உருவாக்குவதே பிரதான நோக்கம்.!!!

கனேடிய மக்களுக்காக சிறந்த உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதே தமது நோக்கம் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃபிரலான்ட் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவுடனான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் சில விடயங்களில் மிகவும் பிடிவாதமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்தில், கனடாவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே கிறிஸ்டியா ப்ரீலண்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதியான ரொபர்ட் லைதிசருடன் இடம்பெற்ற பேச்சுவார்தைகள் ஆக்கபூர்வமான அமைந்திருந்ததாகவும் கிறிஸ்டியா ப்ரீலண்ட் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், தமது அதிகாரிகள் தொடர்ந்து கடினமாக உழைக்க தயாரான உள்ள நிலையில் இன்றும் பேச்சுவார்தைகளை தொடர தீர்மானித்துள்ளதாகவும் கிறிஸ்டியா ப்ரீலண்ட் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் கனேடியர்களுக்காக ஒரு சிறந்த உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதே தமது நோக்கம் என்றும் கிறிஸ்டியா ப்ரீலண்ட் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon