Menu

வெற்றிகளிப்புடன் வழியனுப்புவதே இலக்கு ஜோ ரூட்..!!!

அலெக்ஸ்டர் குக்கை வெற்றி களிப்புடன் வழியனுப்புவதே தங்களின் இலக்கு என இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அலெக்ஸ்டர் குக்கை 4-1 என்ற வெற்றி கணக்கில் வழியனுப்புவதே சிறப்பாக இருக்கும் என்றும் ஜோ ரூட் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முடிவடைந்துள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் பொட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகின்றது.

இந்நிலையில் குறித்த டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் அலெஸ்ட்ர் குக் ஓய்வு பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ஜோ ரூட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

33 வயதான குக், டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த இங்கிலாந்து வீரர் என்பதுடன் 160 டெஸ்டில் விளையாடியுள்ள குக் 12ஆயிரத்து 254 ஓட்டங்கள் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon