Menu

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு மெலானியா டிரம்ப் கண்டனம்..!!!

அமெரிக்காவின் கொள்கைகளை தோற்றுவிக்கும் முக்கிய தூணாக பேச்சு சுதந்திரம் காணப்படுவதாக மெலானியா டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தை பற்றி விமர்சித்துள்ள நியூயோர்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பெயர் குறிப்பிடாத ஆசிரியருக்கு மெலானியா டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனாள்ட் டிரம்பின் முறையற்ற நிர்வாகத்தில் இருந்து அமெரிக்காவை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மூத்த நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளதாகவும் நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையில் டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள பெயர் குறிப்பிடப்படாத மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விடையம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே டொனாள்ட் டிரம்பின் மனைவியான மெலானியா டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பேச்சு சுதந்திரம் என்பது அமெரிக்காவின் கொள்கைகளை தோற்றுவிக்கும் ஒரு முக்கியமான தூண் என்றும் மெலானியா டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கு பத்திரிகை சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்றும் எனவே பத்திரிகைகள் நியாயமாகவும், நடுநிலையாகவும், மற்றும் பொறுப்புடனும் செயற்படவேண்டும் என்றும் மெலானியா டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் துணிச்சலாக பெயரையும் குறிப்பிடவேண்டும் என தெரிவித்த மெலானியா டிரம்ப்,இல்லை எனில் அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் கடுமையான விளைவுகள் ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon