Menu

பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு சவுதி ஆதரவு.!!!!

பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் சீனா, மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நேற்று இஸ்லாமாபாத் நகரில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் சவுதி அரேபியாவின் கலாசாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

 

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பல்வேறு நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

அத்துடன் பயங்கரவாதத்தை அழிப்பதற்காக பாகிஸ்தான் அரசு எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் சவுதி அரேபியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் அமைச்சாரான அவ்வாட் பின் சாலே தெரிவித்துள்ளார்.

 

அதன் பின்னர், பாகிஸ்தானுக்கான 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீனா வெளிவிவகார அமைச்சார் வாங் கி, இம்hரன் கானுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மங்குட் சூறாவளியில் பிலிப்பைன்ஸ் , சீனாவில் பொதுமக்கள் பலி

பிலிப்பைன்சில் 65 பேரைப் பலிகொண்ட மங்குட்...

Leave a Reply

Right Menu Icon