Menu

யாழ் வீராங்கனை தர்ஜினியின் சிறப்பான ஆட்டத்தினால் இலங்கை அணி சம்பியன்.!!!

2018 ஆம் ஆண்டுக்கான ஆசிய வலை பந்தாட்ட இறதிப்போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனையான தர்ஜினியின் சிறப்பான ஆட்டத்தினால் இலங்கை அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஆசிய வலை பந்தாட்ட போட்டித் தொடரில் ஐந்தாவது முறையாகவும் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆசிய வலை பந்தாட்ட இறுதிப் போட்டியானது சிங்கப்பூரின் ஸ்போர்ட்ஸ் ஹப்பின் உள்ளக விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமானது.

நடைபெற்று இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இந்த போட்டியில் இலங்கை அணியானது 69 இற்கு 50 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

போட்டித் தொடரில் இலங்கை அணி சார்பில் அதிக கோல்களைப் பெற்றுக் கொடுத்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் திகழ்கின்றமை விசேட அம்சமாகும்.

 

இம்முறை ஆசிய வலை பந்தாட்ட போட்டித் தொடரில் இடமபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணியானது அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள

 

உலக வலைப்பந்தாட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon