Menu

லங்கா சமசமாஜ கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு..!!!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ் மக்களுக்கான சேவையினை வழங்குவதற்காக லங்கா சமசமாஜ கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு கட்சியின் தலைவரான திஸ்ஸ விதாரண அழைப்பு விடுத்துள்ளார்.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக லங்கா சமசமாஜ கட்சியுடன் இணைந்துகொள்ளுமாறும் திஸ்ஸ விதாரண அழைப்பு விடுத்துள்ளார்.

 

சோசலிச மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே திஸ்ஸ விதாரண இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

முதலமைச்சர் விக்னேஸ்வரன் லங்கா சமசமாஜ கட்சியுடன் இணைந்து, தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கு விரும்பினால் அவரை இணைத்துக்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளார்.

 

லங்கா சமசமாஜ கட்சியுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக விக்னேஸ்வரன் தன்னிடம் தெரிவித்திருந்ததாகவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் வடக்கில் இனவாதம், மதவாதம் மற்றும் பிரிவினைவாதம் அற்ற முறையில் செயங்பட்டு வருக்கின்ற லங்கா சமசமாஜ கட்சியுடன் இணைந்து செயற்பட வருமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுப்பதாகவும் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon