Menu

யோர்க்வில் பகுதியில் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட நபரை தேடும் பொலிசார்.!!!

ஒன்ராறியோவின் யோர்க்வில் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

 

இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் கம்பர்லாண்ட் வீதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தொரிவித்துள்ளனர்

 

23 வயதுடைய பெண் ஒருவர் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே சந்தேக நபர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

20 வயது மதிக்கதக்க சந்தேக நபரான இளைஞன் 5 அல்லது 6 அடி உயரம் உடைய ஒல்லியான தோற்றம் கொண்டவர் என்றும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

 

சம்பவம் இடம்பெற்ற போது சந்தேக நபர் கறுப்பு நிறத்திலான தொப்பி அணிந்திருந்தாக தெரிவித்துள்ள பொலிசார்

 

இது தொடர்பிலான தகவல் அறிந்தோர் தங்களை தொடர்பு கொள்ளுமாறும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon