Menu

சுகாதார சேவையில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகள் இரகசியமாக கண்காணிப்பு.!!!

நாட்டில் சுகாதார சேவையில் இடம்பெறுகின்ற ஊழல், மோசடிகள் தொடர்பாக முறையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

 

சுகாதார சேவையில் இடம்பெறுகின்ற ஊழல், மோசடிகள் மற்றும் ஏனைய முறையற்ற விடயங்கள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன சுகாதார

 

அமைச்சின் விசாரணை பிரிவிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

 

விசாரணை பிரிவின் நடவடிக்கை முறையாக முன்னெடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற போதே ராஜித சேனரத்ன இவ்வாறு தெரிவித்தள்ளார்.

 

வைத்தியர்களின் முறையற்ற செயற்பாடுகள், கடமை நேரங்களின் போது தனியார் மருத்துவ நிலையங்களில் கடமையாற்றுதல், மற்றும் இலவசமாக வழங்கப்படும் மருத்துவ நடவடிக்கைகளை வழங்காமை

 

தொடர்பில் இரகசியமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளமாறும் ராஜித சேனரத்ன அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றில் கொள்ளையர்கள் -சத்தியலிங்கம்

வீதிகளில் நின்று மிளகாய்தூள் வீசி நகைகளை...

Leave a Reply

Right Menu Icon