Menu

பெற்றோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்கட்சிகள் நாடுதழுவிய போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்றைய தினம், நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது.

 

போராட்டத்திற்கு. அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்ததைப் போல், இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

இப்போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.

 

புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், முச்சக்கரவண்டி, உள்ளிட்ட தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை.

 

தமிழகத்தில் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டதுடன், முச்சக்கரவண்டி, வான்கள், இயக்கப்படவில்லை.

 

இந்நிலையில் முழு அடைப்பில் பங்கேற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் வீதி மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் என எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 

டெல்லி ராஜ்காட்டிலிருந்து ராம்லீலா மைதானம் நோக்கி நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றிருந்ததுடன், அவருடன் குலாம் நபி ஆசாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆந்திரா, கேரளா, ஐதராபாத், தெலுங்கானா , தமிழகம் என அனைத்து மானிலங்களிலும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

 

போராட்டத்தின் போது சில பகுதிகளில், ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவில் டயர்களைப் போட்டு எரித்தமையால், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon