Menu

நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள முடியாதவர்கள் பா.ஜா.காவிற்கு எதிராக கூட்டணி அமைக்க திட்டம்- மோடி குற்றச்சாட்டு

ஒருவருக்கொருவர் கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள முடியாதவர்கள், பேச முடியாதவர்கள் எல்லாம் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராக கூட்டணி அமைக்க திட்டமிடுவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது.

 

நிறைவு நாளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, யாராலும் வசப்படுத்த முடியாத இந்தியாவின் வெற்றி மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் அஜய் பாரத், அடல் பிஜேபி என்ற ஸ்லோகனை மக்களவை தேர்தலுக்காக முன்மொழிந்தார்.

 

கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாதவர்கள், ஒருவருக்கொருவர் பேச முடியாதவர்கள் எல்லாம் கூட்டணி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் மீது மோடி சாடியுள்ளார்.

 

பாஜகவின் 48 மாத ஆட்சி, காங்கிரஸ் கட்சியின் 48 ஆண்டுகள் ஆட்சியை விட சிறப்பானது என தெரிவித்த மோடி, பாஜகவின் கொள்கைகள் என்றும் மாறாத நிலையில், யுக்திகள் நேரத்திற்கு தகுந்தவாறு மாறும் என மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon