Menu

சமஷ்டி முறையிலும் பல்வேறு வடிவங்கள்.!! சுவிட்சர்லாந்தில் காணப்படும் சமஷ்டி முறையே உகந்தது.!!!!

சமஷ்டி ஆட்சி என்பது சிங்கள, மற்றும் பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என்று கூற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு மற்றும் 20ஆவது திருத்தச்சட்டம் குறித்து தென்பகுதி மக்களுக்கு விழிப்பூட்டும் வகையிலான சந்திப்பொன்றிலேயே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

 

அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வு முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடனேயே தாம் செயற்பட்டு வருவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தள்ளார்.

 

நாட்டிற்கு சமஷ்டி ஆட்சியே உகந்தது என முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க முதன் முதலாக தெரிவித்திருந்ததாகவும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சமஷ்டி முறையிலும் பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்ற நிலையில், சுவிட்சர்லாந்தில் காணப்படும் சமஷ்டி முறையே நாட்டிற்கு உகந்தது என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தள்ளார்.

 

எனவே, இந்த சமஷ்டி என்பது சிங்கள, பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது எனக் கூற முடியாது என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் பெயரளவில் சமஷ்டி எனக் குறிப்பிட்டுக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்  அரசியலமைப்பின் உள்ளடங்கள் என்னவென்பதை ஆராய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon