Menu

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் மோடியிடம் எடுத்துக் கூறிய சம்பந்தன்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம், மற்றும் அதில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களை எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மோடியிடம் விளக்கியுள்ளார்.

 

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்தியா சென்றுள்ள சில கட்சிகளை உள்ளடக்கிய குழு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளது.

 

இந்த சந்திப்பின் போது புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் என்பவற்றை எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மோடியிடம் விளக்கியுள்ளார்.

 

அத்துடன்இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்தியப் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதுதவிர, இலங்கையில் வழும் இந்திய வம்சாவழி மக்களின் நலன்கருதி இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இந்திய வீட்டுத்திட்டத்திற்கு அமைச்சர் மனோகணேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் மேலும் பல திட்டங்களை இந்திய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர், மனோகணேசன், கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதனிடையே, இந்த குழு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உள்ளட்ட பல தரப்பினரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதன்போது, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்களை விரிவாக்கிக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அத்துடன், இலங்கையில் இடம்பெறுகின்ற புதிய அரசியல் யாப்பு உருவாக்க செயற்பாடுகள் தொடர்பிலும் இந்த குழுவினால் இந்திய அரசியல்வாதிகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

 

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இந்தியா சென்றுள்ள இந்த குழுவில், எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், அமைச்சர்களான மனோகணேசன், லக்ஷ்மன் கிரியெல்ல, நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

திறன் இந்தியா திட்டத்தின் தூதர்களாக பாலிவுட் பிரபலங்கள்

'திறன் இந்தியா' திட்டத்தின் துாதர்களாக...

Leave a Reply

Right Menu Icon