Menu

அரசியல் பழிவாங்களுக்காகவே விசேட நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்கிறார்.!!!

நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றங்கள் அனைத்தும் அரசியல் பழிவாங்களுக்காகவே பயன்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

 

கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றத்தில் கோட்டாய ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேரும் இன்று முன்னிலையாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

அத்துடன் இந்த வழக்கு விசாரணையின போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன், முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிரணியின் உறுப்பினர்களும் வருகைத் தந்திருந்தனர்.

 

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் முழு உலகமும் ஏற்றுக்கொண்ட பயங்கரவாதியான பிரபாகரனுக்கு மலர் தூவி, அஞ்சலி செலுத்துவதை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், பண்டாரநாயக்கவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபிக்க உதவியவருக்கு சிலை வைக்கும் போது அரசாங்கம் அதனை எதிர்ப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இவ்வாறான செயற்பாட்டை அரசாங்கத்தில் உள்ள சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் கூட எதிர்ப்பது தமக்கு கவலையளிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

 

நல்லாட்சி அரசாங்கம் பொய்யான வழக்குகள் மூலம், தம்மை அரசியல் ரீதியாக அச்சுறுத்துவதனால் மக்களுக்கான பிரச்சினைகள் தீர்ந்துவிடாது என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

 

எனவே விசேட நீதிமன்றங்கள் எல்லாம் அரசியல் பழிவாங்களுக்காகவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon